/ தினமலர் டிவி 
                            
  
                            /  பொது 
                            / சென்னை வானிலை மையம் கொடுத்த பரபரப்பு அப்டேட் | Red alert | Coimbatore | Nilgiris | Meteorological d                                        
                                     சென்னை வானிலை மையம் கொடுத்த பரபரப்பு அப்டேட் | Red alert | Coimbatore | Nilgiris | Meteorological d
கேரளாவில் அடுத்த 2 நாட்களில் தென்மேற்கு பருவமழை துவங்கலாம் என எதிர்பார்க்கப்படும் சூழலில், அது தமிழகத்தின் சில பகுதிகளிலும் பரவும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. மத்திய கிழக்கு அரபிக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது வடக்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும். இதன் காரணமாக நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை, காரைக்காலிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
 மே 23, 2025