உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 14 இடங்களில் ED அதிரடி: உ.பி, மும்பையில் பரபரப்பு |

14 இடங்களில் ED அதிரடி: உ.பி, மும்பையில் பரபரப்பு |

உத்தரப்பிரதேச மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள மதுபூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜமாலுதீன் என்ற சங்குர் பாபா. இவரது உண்மையான பெயர் Karimulla Shah கரிமுல்லா ஷா. தாழ்த்தப்பட்ட மக்கள், வறுமையில் வாடும் மக்களை மூளைச் சலவை செய்து சங்குர்பாபா இஸ்லாம் மதத்துக்கு மதமாற்றம் செய்வதாக புகார்கள் கிளம்பின. ஆரம்பத்தில், சங்குர் பாபா சந்த் Madhupur மதுப்பூர் கிராமத்தில் உள்ள அவுலியா தர்கா முன் வளையல் மற்றும் தாயத்துகளை விற்று வந்தார். அதன்பிறகு, தனக்கென ஒரு நெட்ஒர்க்கை ஏற்படுத்திக் கொண்டு, தர்கா வளாகத்தில் கூட்டங்களை நடத்தினார். அப்போது, இஸ்லாம் மத கோட்பாடுகள் பற்றி சொற்பொழிவாற்றுவார். கேட்பவர் மனதை மாற்றும் வகையில் அவரது கருத்துக்கள் அமைந்திருக்கும். இதன்மூலம், மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களை மதம் மாற்ற துவங்கினார். குறிப்பாக, இந்துக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களை இஸ்லாம் மதத்துக்கு மாற்றும் வேலைகளை வேகமாக செய்தார். பணம் பொருள் கொடுத்தும், வற்புறுத்தியும், பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றியும் மத மாற்றத்தை செய்துள்ளார். இந்துக்களை மதமாற்றம் செய்வதற்காக, வெளிநாடுகளில் இருந்து அவருக்கு ஏராளமான பணம் வந்தது. கிட்டத்தட்ட 500 கோடி ரூபாயை அவர் வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பெற்றதாக கூறப்படுகிறது. சங்குர் பாபா மீது அதிகமாக புகார்கள் வரத் துவங்கியதை அடுத்து, லக்னோ ஓட்டலில் பதுங்கியிருந்த அவரை உத்தரப்பிரதேச பயங்கரவாத தடுப்புப்பிரிவு போலீசார் அவரை கடந்த 5 ம்தேதி கைது செய்தனர். அவருடன் தங்கியிருந்த அவரது உதவியாளர் நீட்டு என்ற நஸ் ரீன், அவரது கணவர் நவீன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். உ.பி. போலீசாரின் வழக்கின் அடிப்படையில், இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக, அமலாக்கத்துறை கடந்த 10ம்தேதி தனியாக ஒரு வழக்கு பதிவு செய்தது. மத மாற்றம் செய்வதற்காக, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து 40 வங்கிக்கணக்குகள் மூலமாக 106 கோடி ரூபாயை சங்குர் பாபா பெற்றிருப்பதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. அதைத்தொடர்ந்து சங்குர் பாபா மற்றும் நஸ் ரீன், நவீன் ஆகியோர் குவித்துள்ள சொத்துக்கள் பற்றிய விவரங்களை உ.பி. அதிகாரிகள் மற்றும் போலீசார் மூலம் அமலாக்கத்துறை அதிகாரிகள் திரட்டினர். இந்நிலையில், இன்று அதிகாலை 5 மணி முதல் சங்குர் பாபா தொடர்புடைய 14 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். சங்குர் பாபா பிறந்த பல்ராம்பூர் மாவட்டத்தில் 12 இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

ஜூலை 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !