₹50 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட நக்சல் தலைவன் காலி | Chhattisgarh | Naxal head | Encounter |
சத்தீஸ்கர் மாநிலம், பிஜாப்பூர் மாவட்டம் இந்திராவதி தேசிய பூங்காவில் நக்சலைட்டுகளின் முக்கிய தலைவர்கள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பாதுகாப்பு படையினர், சத்தீஸ்கர் போலீசார் மற்றும் சிறப்பு படை வீரர்கள் அந்த இடத்தில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படை வீர்களை நோக்கி நக்சல்கள், துப்பாக்கியால் சுட்டனர். வீரர்களும் பதிலடி கொடுத்தனர். துப்பாக்கி சண்டையில் நக்சலைட் அமைப்பின் முக்கிய தலைவன் கவுதம் என்கிற சுதாகர் சுட்டுக் கொல்லப்பட்டான். இவனது தலைக்கு ஏற்கனவே 50 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டு இருந்தது. மஹாராஷ்டிரா, தெலங்கானா மற்றும் சத்தீஸ்கரில் செயல்பட்டு வந்த சுதாகரை, பாதுகாப்பு படையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில்தான் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளான். தானியங்கி துப்பாக்கிகள் உள்பட ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. அப்பகுதியில் நக்சல் வேட்டை தொடர்ந்து வருகிறது.