உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 10 நாள் தொடர் ஆபரேஷன் 49 நக்சலைட்கள் அவுட் | Chhattisgarh | Security forces | Naxalites

10 நாள் தொடர் ஆபரேஷன் 49 நக்சலைட்கள் அவுட் | Chhattisgarh | Security forces | Naxalites

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தின் கெர்லாபால் பகுதியில் நக்சலைட்கள் பதுங்கி இருந்த இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்தனர். அப்போது இது தரப்பினர் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. 17 நக்சலைட்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். கொல்லப்பட்டவர்களில் நக்சல்களின் தளபதி ஜெகதீஷ் என்கிற புத்ராவும் ஒருவர் என்பது பின்னர் அடையாளம் காணப்பட்டது. இவரது தலைக்கு ஏற்கனவே 25 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது. நக்சல்களுக்கு தர்பா பிரிவின் பொறுப்பாளராக இருந்தவர் தான் புத்ரா. 2013ம் ஆண்டு ஜிராம் பள்ளத்தாக்கில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் காங்கிரஸ் தலைவர் ஒருவர் மற்றும் 25 பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டார். சத்தீஸ்கரின் அரண்பூரில் 2023ல் நடந்த நக்சல்கள் தாக்குதலில் DRG எனப்படும் மாவட்ட ரிசர்வ் கார்டை சேர்ந்த பல வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த இரண்டு தாக்குதலுக்கும் முக்கிய பொறுப்பு வகித்தவர் புத்ரா. பல ஆண்டுகளாக பாதுகாப்பு ஏஜென்சிகளின் ரேடாரில் இருந்த அவர், தற்போது கொல்லப்பட்டு இருப்பது நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையில் கிடைத்த முக்கியமான வெற்றி என அதிகாரிகள் கூறினர்.

மார் 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ