உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சிக்கன் பக்கோடாவை பார்த்து பதறி போன குடும்பம் ! | Chicken Pakoda issue | Vellore

சிக்கன் பக்கோடாவை பார்த்து பதறி போன குடும்பம் ! | Chicken Pakoda issue | Vellore

வேலூர், காட்பாடி அருகே கல்புதூரில் சிக்கன், மீன் பக்கோடா கடை செயல்படுகிறது. இங்கு, அதே பகுதியில் வசிக்கும் அர்ச்சனா என்ற நர்ஸ், வீட்டுக்கு சிக்கன் பக்கோடா பார்சல் வாங்கி சென்றுள்ளார். வீட்டிற்கு சென்றதும் பார்சலை திறந்து பார்த்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சிக்கனுடன், புழுவும் சேர்ந்து எண்ணெயில் பொரித்து இருந்துள்ளது. ஆசையுடன் சாப்பிட போன அர்ச்சனாவின் குழந்தைகள் சிக்கனுடன் புழு இருந்ததை பார்த்து ஷாக் ஆகி தாயிடம் கூறியுள்ளனர். அதை வீடியோ எடுத்த அர்ச்சனா, உணவு அதிகாரிகள் கவனத்துக்கு செல்லும் வகையில் சோசியல் மீடியாவில் பதிவிட்டார். சிக்கனுடன் புழுவையும் சேர்த்து பொரித்து விற்பனையான சிக்கன் பக்கோடா பார்சல் வீடியோ வைரலாக பரவுகிறது

ஏப் 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை