மோடி-தாயார் AI வீடியோ: உடனே நீக்க கோர்ட் ஆடர் PatnaHighCourt | AIVideo
பீகார் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் நடக்கப்போகும் சட்டசபைத் தேர்தலில் ஆளும் பாஜ கூட்டணிக்கும் இண்டி கூட்டணிக்கும் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பீகாரில் ஓட்டு திருட்டு நடந்துள்ளதாக ராகுல் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இந்த விவகாரத்தில் பீகாரில் ராகுல் நடத்திய யாத்திரையின்போது, பிரதமர் மோடி, அவர் தாயார் ஹீராபென்னை மிக மோசமாக திட்டி காங்கிரசார் கோஷங்களை முழங்கியது பீகார் அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. ராகுலை கண்டித்து நாடு முழுக்க போராட்டங்கள் நடந்தன. பிரதமர் மோடி இந்த விஷயத்தை பற்றி பீகார் கூட்டத்தில் உருக்கமாக பேசினார்.
செப் 17, 2025