வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இடி சீனாவில் கேட்கலாம் ஆனால் மின்னல் வெட்டில் பலியாக போவது அமெரிக்க வாழ் மக்களும் தான்
100% வரி... சீனா தலையில் US இறங்கிய இடி US vs China | trump vs xi | trump imposes 100% tax on china
டிரம்ப் போட்ட அதிரடி உத்தரவால் மீண்டும் அமெரிக்கா, சீனா இடையே இப்போது வர்த்தகப்போர் வெடித்துள்ளது. அமெரிக்க அதிபராக 2வது முறை பதவி ஏற்ற டிரம்ப், பரஸ்பர வரி என்ற பெயரில் இந்தியா, சீனா உட்பட உலகின் பல நாடுகளுக்கு தடாலடி வரி போட்டார். சீனா திருப்பி அடித்தது. அமெரிக்க வரிக்கு பதில் வரி போட்டது. இரு நாடுகளும் மாறி மாறி வரிப்போட்டதால் மிகப்பெரிய வர்த்தகப்போர் வெடித்தது. ஒரு கட்டத்தில் சீனாவுக்கு 145 சதவீதம் வரி போட்டது அமெரிக்கா. பதிலுக்கு 135 சதவீதம் வரி போட்டு மிரட்டியது சீனா. இரு நாடுகள் இடையே வர்த்தகம் ஸ்தம்பித்து போனது. ஸ்விட்சர்லாந்தில் நடந்த பேச்சு வார்த்தையில் 2 நாடுகளும் ஒரு உடன்பாட்டுக்கு வந்தன. இரு நாடுகளும் மாறி மாறி போட்ட வரிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. சீனாவுக்கு ஏற்கனவே அமெரிக்கா போட்டிருந்த 30 சதவீத வரி மட்டும் அமலில் இருந்தது. அமெரிக்காவுக்கு தேவைப்படும் அரிய வகை காந்தம் சீனாவில் தான் கொட்டிக்கிடக்கிறது. அதை வைத்து சீனா மிரட்டியதால் தான் அமெரிக்கா சரண் அடைந்தது.
இடி சீனாவில் கேட்கலாம் ஆனால் மின்னல் வெட்டில் பலியாக போவது அமெரிக்க வாழ் மக்களும் தான்