கேரள நிலச்சரிவில் திக் திக்! அடுத்து என்ன? | wayanad landslide what next? | chooralmala | Mundakai
கேரளாவின் வயநாடு சூரல்மலை, முண்டகை பகுதியில் அதிகாலையில் அடுத்தடுத்து 3 மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. சூரல்மலை, முண்டகையை இணைக்கும் ஆற்று பாலத்தை பெருவெள்ளம் அடித்து சென்றது. முண்டகை தனித்தீவானது. நிலச்சரிவில் பலர் புதைந்தனர். ஏராளமானோரை ஆற்று வெள்ளம் அடித்து சென்றது. நூற்றுக்கணக்கானோர் உயிருக்கு போராடினர். நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படை, உள்ளூர் தீயணைப்பு வீரர்கள் களம் இறங்கினர். சூரல்மலை, முண்டகையில் மீட்பு பணி தீவிரமாக நடந்தது. நூற்றுக்கணக்கானோரை வீரர்கள் மீட்டனர். 3000 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். அதே நேரம் பலி எண்ணிக்கை 100ஐ தாண்டி விட்டது. இன்னும் பலர் முண்டகை மேல் பகுதியில் தவிக்கின்றனர். மலைபகுதி என்பதாலும், மழைக்காலம் என்பதாலும் 5 மணி அளவிலேயே சூரல்மலை, முண்டகை பகுதியை இருள் சூழ்ந்தது.