கடலோர மக்களுக்கு அலர்ட்: CISF வருகையின் பின்னணி | CISF | Indian Coastal Guard
நாகையில் முகாமிட்ட CISF படையினர் வியக்க வைத்த மக்களின் தேசப்பற்று! கடல் வழி தீவிரவாத ஊடுருவல் மற்றும் போதை பொருள் கடத்தலை தடுக்க கடலோர மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சைக்கிள் பேரணியை துவங்கியுள்ளனர். விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றுள்ள வீரர்களுக்கு மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என சில நாட்களுக்கு முன் நடிகர் ரஜினி கூறி இருந்தார். இப்போது மேற்குவங்கத்தில் இருந்து மார்ச் 7ம் தேதி துவங்கிய மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களின் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நாகப்பட்டினம் வந்து சேர்ந்தது. 8 பெண்கள் உட்பட 50 பேர் கொண்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு ஆரியநாட்டுத்தெரு மீனவ கிராமம் சார்பில் தாரை தப்பட்டை முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மஞ்சக்கொல்லை பள்ளி மாணவ, மாணவிகள் ரோஜாப்பூ மலர் தூவி, மாலை அணிவித்து கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு அங்கிருந்த ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து மகிழ்ந்தனர்.