உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கைகாசு போட்டு பிரச்னைக்கு தீர்வு காணும் குறிஞ்சி நகர் மக்கள் | Coimbatore Corporation | Kuniyamuthu

கைகாசு போட்டு பிரச்னைக்கு தீர்வு காணும் குறிஞ்சி நகர் மக்கள் | Coimbatore Corporation | Kuniyamuthu

அரசை நம்பி பயனில்லை களத்தில் இறங்கிய மக்கள்! எல்லா வரியும் கட்றோம் வசதி செய்ய மாட்றாங்க கோவை மாநகராட்சிக்குட்பட்ட குனியமுத்தூர், குறிஞ்சி நகர் பேஸ்-2 பகுதியில் 10 ஆண்டுகளாக மழைநீர் வடிகால் இல்லாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எதுவும் நடக்கவில்லை. அரசை நம்பி இனி பயனில்லை என்று நினைத்த மக்கள் தாங்களே மழைநீர் வடிகால் கட்டிக்கொள்ள முடிவெடுத்தனர். கோவை மாநகராட்சியிடம் ஆட்சேபனை இல்லை என்று கடிதம் பெற்றனர். குறிஞ்சி நகரில் ஒரு குடும்பத்துக்கு 15 ஆயிரம் வீதம் 9 லட்சம் ரூபாய் வசூல் வரை செய்து மழைநீர் வடிகால் கட்டும் பணியை அமைத்து வருகின்றனர். ஆனால், 290 மீட்டர் நீளமுள்ள மழைநீர் வடிகால் கட்ட 15 லட்சம் ரூபாய் ஆகும் என மதிபிடப்பட்டு உள்ளதால் எஞ்சிய 6 லட்சம் ரூபாயையாவது கோவை மாநகராட்சி வழங்க வேண்டும் என்று குறிஞ்சிநகர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மார் 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி