சிங்காநல்லூர் அருகே நள்ளிரவில் பரபரப்பு கொள்ளை | Theft | Coimbatore Pawn shop | Gold loot
கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார். கோவை டு திருச்சி சாலையில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். நேற்று சிவராத்திரியை முன்னிட்டு கடைக்கு விடுமுறை விட்டு குடும்பத்துடன் கோயிலுக்கு சென்றுள்ளார். இரவு 11 மணியளவில் கடையின் பின்புற ஷட்டர் உடைக்கப்பட்டு இருப்பதாக ரமேஷ்குமாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக புறப்பட்டு கடைக்கு வந்துள்ளார். மர்ம நபர்கள் உள்ளே புகுந்து 100 சவரன் தங்கம் மற்றும் 20 கிலோ வெள்ளி நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. சிங்காநல்லூர் போலீசார் மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்களுடன் களமிறங்கினர். ஸ்பாட்டில் தடயங்களை சேகரித்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை சேகரித்தனர். தப்பியோடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர். விசாரணை நடக்கிறது.