பணி முடியாமலேயே திறக்க வரும் ஸ்டாலின்: பதில் சொல்ல திணறிய நேரு | Coimbatore Semmozhi Poonga
2010ல் கோவையில் நடந்த உலக தமிழ் செம்மொழி மாநாட்டில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அறிவிப்புகளில் முக்கியமானது, செம்மொழி பூங்கா திட்டம். அப்போது கோவை மத்திய சிறையை நகருக்கு வெளியே மாற்றி விட்டு, 165 ஏக்கரில் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டது. 2011ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. 2021ல் தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், செம்மொழி பூங்கா திட்டத்துக்கு புத்துயிர் கொடுக்கப்பட்டது. முதல்கட்டமாக, காந்திபுரத்தில், 45 ஏக்கர் பரப்பளவில் 214 கோடி ரூபாயில் பூங்கா அமைக்கும் பணியை மாநகராட்சி மேற்கொண்டது. 2024 அக்டோபர் 6ல் முதல்வர் ஸ்டாலின் கோவை வந்திருந்தபோது, 2025 ஜூனில் செம்மொழி பூங்கா பயன்பாட்டுக்கு வரும் என அறிவித்தார்.