மொத்த கும்பலும் பெண்களுக்கு எதிராக திரும்பியது ஏன்? | Congo | Congo Prison
மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில் அந்நாட்டு ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் 25 ஆண்டுகளுக்கு மேலாக சண்டை நடந்து வருகிறது. அண்டை நாடான ருவாண்டாவின் ஆதரவுடன் செயல்படும் கிளர்ச்சியாளர்கள் குழுக்களில் ஒன்றான எம்23 அங்குள்ள முக்கிய நகரங்களை அடுத்தடுத்து கைப்பற்றி வருகிறது. 10 லட்சம் மக்கள் தொகை கொண்ட காங்கோவின் கோமா நகருக்குள் கடந்த வாரம் கிளர்ச்சி படையினர் நுழைந்தனர். இதனால் பதற்றமான சூழல் நிலவுகிறது. அங்கு நிலவும் அசாதாரண சூழலை பயன்படுத்தி பெண்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
பிப் 07, 2025