அம்பேத்கர் விவகாரத்தில் முற்றுகிறது பாஜ-காங் மோதல்
ராஜ்யசபாவில் அம்பேத்கர் பற்றி உள்துறை அமைச்சர் அமித்ஷா, அவமரியாதையாக பேசியாக எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அமித்ஷா மன்னிப்பு கேட்க வலியுறுத்தி இன்று பார்லிமென்ட் வளாகத்தில் எதிர்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பதிலுக்கு பாஜவினரும் அதே இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அம்பேத்கரை காங்கிரஸ்தான் அவமதித்தாக கூறினர். அப்போது இருதரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பாஜவின் 2 எம்பிக்களுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் அம்பேத்கர் விவகாரத்தை மேலும் சீரியஸ் ஆக்கி உள்ளது. இச்சூழலில், மகாராஷ்டிராவின் மும்பையில் காங்கிரஸ் நகர அலுவலகம் முன்பு திரண்ட பாஜ இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அம்பேத்கரை காங்கிரஸ்தான் அவமதித்தாக கூறி கண்டன முழக்கமிட்டனர்.