உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காங்கிரஸ் மேலிடத்தில் திமுகவுக்கு அழுத்தம்! | Congress | Rajya Sabha MP | Delhi

காங்கிரஸ் மேலிடத்தில் திமுகவுக்கு அழுத்தம்! | Congress | Rajya Sabha MP | Delhi

தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டு, ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அவருக்கு எதிராக 15 அதிருப்தி மாவட்ட தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். சமீபத்தில் டில்லி சென்ற அந்த 15 பேரும், மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கரை சந்தித்து மனு கொடுத்தனர். ஆனால் கட்சி தலைவர் கார்கேவை சந்திக்க முடியாமல், ஏமாற்றத்துடன் சென்னை திரும்பினர். இந்த சூழலில் வரும் ஜூனில் ராஜ்யசபா எம்பி தேர்தல் நடக்க உள்ளது. திமுக ஆதரவுடன் அப்பதவியை பெற தமிழக காங்கிரசை சேர்ந்த முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, திருநாவுக்கரசர், முன்னாள் எம்பிக்கள் செல்லக்குமார், விஸ்வநாதன், ஜெயகுமார் முயற்சி எடுத்து வருகின்றனர். லோக்சபா தேர்தலில், இவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் ராஜ்யசபா பதவியை விரும்புகின்றனர். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒரு பதவியை வழங்கினால் தான் இவர்கள் ஆசை நிறைவேறும்.

பிப் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !