உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பணி நிரந்தரம் கேட்டு தொகுப்பூதிய நர்ஸ்கள் விடிய விடிய போராட்டம்! Contract nurses Protest | demanding

பணி நிரந்தரம் கேட்டு தொகுப்பூதிய நர்ஸ்கள் விடிய விடிய போராட்டம்! Contract nurses Protest | demanding

ஆட்சிக்கு வந்தால் தொகுப்பூதிய நர்ஸ்களை பணி நிரந்தரம் செய்வோம் என 2021ல் திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால் தற்போது வரை பணி நிரந்தரம் செய்யவில்லை. தொகுப்பூதிய நர்ஸ்களுக்கு, நிரந்தர நர்ஸ்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்ற ஐகோர்ட் உத்தரவை எதிர்த்தும் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளது. இதை கண்டித்து, சென்னை சிவானந்தா சாலையில் நேற்று தமிழக செவிலியர் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொகுப்பூதிய நர்ஸ்கள் ஆயிரம் பேர் பங்கேற்றனர். அதில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் மீதான மேல் முறையீட்டை கைவிட வேண்டும். நர்ஸ் கண்காணிப்பாளர் நிலை 3 பணியிடங்களை மீண்டும் உருவாக்க வேண்டும். கோவிட் காலகட்டத்தில் பணி செய்த அனைத்து தற்காலிக நர்ஸ்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும். பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு முடித்த நர்ஸ்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், நர்சிங் கல்லூரிகள் உருவாக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிரந்தர நர்ஸ் மற்றும் நர்ஸ் கண்காணிப்பாளர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். நர்ஸ் சங்க நிர்வாகிகளிடம் சுகாதாரத்துறைச் செயலாளர் செந்தில்குமார் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனால் காலை தொடங்கிய உண்ணாவிரதம் இரவு 7.30 வரை தொடர்ந்தது. அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு போலீசார் கூறினர். ஆனால் கோரிக்கை ஏற்கப்படும் வரை போராட்டம் தொடரும் என நர்ஸ்கள் உறுதியாக இருந்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நர்ஸ்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி பஸ்சில் ஏற்றி கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் கொண்டு சென்று இறக்கிவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த நர்ஸ்கள் பஸ் ஸ்டாண்ட்டில் அமர்ந்து தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். கோரிக்கைகளை நிறைவேற்றாமல் கலைந்து செல்ல மாட்டோம் எனக் கூறி திமுக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். பஸ் ஸ்டாண்ட்டில் போராட அனுமதி இல்லை எனக் கூறிய போலீசார், அவர்களை மீண்டும் கைது செய்து ஊரப்பாக்கத்தில் உள்ள மண்டபத்தில் அடைத்தனர். நர்ஸ் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளை மட்டும் பேச்சு வார்த்தைக்காக தலைமைச் செயலகத்துக்கு அழைத்துச் சென்றனர். இந்த நிலையில், காலிப்பணியிடங்கள் இருந்தால் மட்டுமே பணி நிரந்தரம் செய்ய முடியும் என சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழக அரசின் இந்த செயலுக்கு அண்ணாமலை மற்றும் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கைது செய்தவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்றும், தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்ற வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். #Contractnurses #demandingpermanentjop #nursearrest #ADMK #BJPcondemntheaction #nursesprotest #annamalai #edappadi palanisami #DMK

டிச 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !