/ தினமலர் டிவி
/ பொது
/ மாநகராட்சி குப்பை கொட்ட எதிர்ப்பு! தீவிரமாகும் பிரச்னை | Corporation | Tiruppur | Protest
மாநகராட்சி குப்பை கொட்ட எதிர்ப்பு! தீவிரமாகும் பிரச்னை | Corporation | Tiruppur | Protest
கடைகள் அடைப்பு வீதிக்கு வந்த மக்கள் குண்டு கட்டாக கைது என்ன காரணம்? திருப்பூர் மாநகராட்சியின் 60 வார்டுகளில் தினசரி 700 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பைகள் முதலிபாளையம் பகுதியில் உள்ள பாறைக்குழியில் மாநகராட்சி சார்பில் கொட்டப்பட்டு வருகிறது. கடும் துர்நாற்றம் வீசுவதாகவும், தொற்று நோய் சரும பாதிப்பு ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். 3 மாதமாக இவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இந்த சூழலில் இன்று முதலிபாளையம், சிட்கோ, நாச்சி பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 200க்கும் அதிகமானோர் கடை அடைப்பு போராட்டம் நடத்தினர்.
செப் 22, 2025