உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஷெபாஸ் ஷெரீப் முன்னிலையில் பாகிஸ்தானை பொளந்த மோடி pakistan pm Shehbaz Sharif PM narendra Modi

ஷெபாஸ் ஷெரீப் முன்னிலையில் பாகிஸ்தானை பொளந்த மோடி pakistan pm Shehbaz Sharif PM narendra Modi

சீனாவில் உள்ள தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு நேற்று துவங்கியது. இன்று 2வது நாள் மாநாடு நடந்தது. மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார். அப்போது, பஹல்காம் தாக்குதல் சம்பவம் பற்றி பேசிய மோடி, பாகிஸ்தானின் முகத்திரையை கிழித்தார். மாநாட்டில் மோடி பேசியதாவது: ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிக்கும் பாதுகாப்பு, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை மிகவும் முக்கியமானது. பயங்கரவாதம், பிரிவினைவாதம் ஒவ்வொரு நாட்டின் பாதையில் வரும் மிகப்பெரிய சவால்களாகும். பயங்கரவாதம் என்பது ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் மிக மோசமான ஒரு சவால். அதனால்தான் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் உலக நாடுகள் ஒன்றுபட வேண்டும் என மீண்டும் மீண்டும் இந்தியா வலியுறுத்துகிறது பயங்கரவாத விஷயத்தில் இரட்டை நிலைப்பாட்டை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை நாம் தெளிவாகவும், ஒரே குரலிலும் கூற வேண்டும். அதுதான் பயங்கரவாத ஒழிப்புப் போரில் மிகவும் இன்றியமையாதது. பயங்கரவாதம் எந்த ரூபத்தில் இருந்தாலும் அதை நாம் உறுதியாக எதிர்க்க வேண்டும். மனித இனத்துக்கு அமைதியான உலகை உருவாக்கித் தருவது தலைவர்களாகிய நம்முடைய முக்கிய கடமை. இந்தியா கடந்த 40 ஆண்டுகளாக பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. பல தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை பயங்கரவாதத்துக்கு பலி கொடுத்துள்ளனர். சமீபத்தில் காஷ்மீரில் பஹல்காமில் மிகவும் கொடூரமான பயங்கரவாத தாக்குதல் நடந்தது. நெருக்கடியான இந்த தருணத்தின்போது இந்தியாவுடன் துணை ந நின்ற நட்பு நாடுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது இந்தியாவின் ஆன்மாவின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மட்டுமல்ல, ஆனால் மனித நேயத்தில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு நாட்டுக்கும் விடுக்கப்படும் வெளிப்படையான சவால். குடிமக்களை பாதுகாப்பது ஒவ்வொரு நாட்டின் உரிமை. பயங்கரவாதம் இந்தியாவுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகையும் அச்சுறுத்தும் மிகப்பெரிய சவால். இப்படிப்பட்ட சூழலில் சில நாடுகள் பயங்கரவாதத்தை வெளிப்படையாக ஆதரிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதா? உலக நாடுகள் சிந்திக்கவேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் எந்த இரட்டை நிலைப்பாட்டை பொறுத்துக் கொள்ள முடியாது என பிரதமர் மோடி ஆவேசமாக கூறினார். நரேந்திர மோடி பிரதமர் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் பாகிஸ்தானும் ஒரு உறுப்பு நாடுதான். பிரதமர் மோடி பேசும்போது, அந்த கூட்ட அரங்கில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும் இருந்தார். அவர் முன்னிலையிலேயே பஹல்காம் தாக்குதல் பற்றி பேசி பாகிஸ்தானை மோடி வெளுத்து வாங்கியது பயங்கரவாத ஒழிப்பில் இந்தியா கொண்டுள்ள உறுதியை காட்டுவதாக உள்ளது.

செப் 01, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

W W
செப் 12, 2025 08:51

பக்கி >50 வருடமாக உலகளவில் பயங்கரவாதம் ட்ரைனிங் Centre, Drugsகடத்தல் , கள்ள பணம் கடத்தல்Counter fits Note எல்லாவற்றிற்கும் ஹெட் குவர்டெர்ஸ் இதனை முந்தய அரசு, சில உலக நாடுகள் யாரும் கண்டு கொள்ளவில்லை சிலர் ஆதரித்தனர் என்பது கேழ்விக்குறித்தான். இப்போதாவது இன்றைய அரசு அதனை உலகத்தில் யாவரும் அறியும் வண்ணம் பறை சாற்றியதற்கு மிக்க நன்றி .இனியாவது பக்கி திருத்தினால் சரி நாய்வால் கதைதான்


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ