முன்ஜாமின் வழக்கு ஒத்திவைத்த பின்னர் நடந்த திடீர் ட்விஸ்ட் Anticipatory bail| Anand | Nirmal|Court
தவெக தலைவர் விஜய் கரூரில் செப்டம்பர் 27ல் பிரசாரம் செய்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். இது தொடர்பாக தவெக பொது செயலாளர் ஆனந்த், இணை பொது செயலாளர் நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், தெற்கு மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் மீது கரூர் போலீசார் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மதியழகன், பவுன்ராஜ் கைது செய்யப்பட்டனர். ஆனந்த், நிர்மல்குமாரை போலீசார் தேடுகின்றனர். கைதாவதில் இருந்து தப்பிக்க அவர்கள் இருவரும் முன்ஜாமின் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தனர். நீதிபதிகள் தண்டபாணி, ஜோதி ராமன் அமர்வு விசாரித்தது. மனுதாரர்கள் தரப்பில் வாதிடும்போது, கரூர் சம்பவம் திட்டமிட்டு நடந்தது இல்லை; அது ஒரு விபத்து. எங்கள் தொண்டர்களை கொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. போலீசார் தடியடி நடத்தியதால்தான் நெரிசல் ஏற்பட்டது. கூட்டத்தை மேலாண்மை செய்ய வேண்டிய முழு பொறுப்பும் அரசுக்குத்தான் உள்ளது என்று கூறினர்.