/ தினமலர் டிவி
/ பொது
/ பாகிஸ்தான் உடனான டீல்; சீனா பின்வாங்கியதன் பின்னணி CPEC project| china pakistan Deal |Belt and road
பாகிஸ்தான் உடனான டீல்; சீனா பின்வாங்கியதன் பின்னணி CPEC project| china pakistan Deal |Belt and road
சீனா- பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் திட்டத்துக்கு பாகிஸ்தானுக்கு நிதி உதவி அளிக்கும் முடிவை சீனா கைவிட்டு இருக்கிறது. சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் ஒரு பகுதிதான், சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம். இது, பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்தை ரோடு, ரயில்வே மூலம் சீனாவை இணைக்கும் திட்டம். இத்திட்டத்தில் பாகிஸ்தானின் கராட்சி-ரோஹ்ரி ரயில் திட்டத்திற்கு சீனா 2 பில்லியன் டாலர் நிதி கொடுப்பதாக இருந்தது. சமீபத்தில் சீனா சென்று இருந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்த திட்டம் தொடர்பாக சீனாவிடம் பேசியிருக்கிறார். ஆனால், அந்த திட்டத்தில் இருந்து விலகுவதாக சீனா தெரிவித்து இருக்கிறது.
செப் 06, 2025