உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்திய கம்யூ செயலாளர் சம்பவத்தில் உலுக்கும் அதிர்ச்சி | CPI Muthu krishnan case | Trichy crime case

இந்திய கம்யூ செயலாளர் சம்பவத்தில் உலுக்கும் அதிர்ச்சி | CPI Muthu krishnan case | Trichy crime case

திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள பூக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் வயது 49. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மணச்சநல்லூர் ஒன்றிய செயலாளராக இருந்தார். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் நெய் கிருஷ்ணன். மூட்டை தூக்கும் தொழிலாளி. நேற்று இரவு இவர் முத்துகிருஷ்ணன் வீட்டு வழியாக தெருவில் நடந்து சென்றார். அப்போது முத்துகிருஷ்ணன் வீட்டு நாய், நெய் கிருஷ்ணனை பார்த்து குரைத்து இருக்கிறது. இதனால் முத்து கிருஷ்ணனை நெய் கிருஷ்ணன் திட்டி இருக்கிறார். உடனே 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் 2 பேரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். மாறி, மாறி கட்டையால் தாக்கிக்கொண்டனர். இதில் 2 பேருக்கும் காயம் ஏற்பட்டது. 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைகளில் சேர்த்தனர். முத்துகிருஷ்ணன் ஸ்ரீரங்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி முத்து கிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். முத்து கிருஷ்ணன் சடலத்தை கைப்பற்றி விசாரிக்கின்றனர். கொலை செய்யப்பட்ட முத்து கிருஷ்ணனுக்கு 2 மனைவிகள். முதல் மனைவி மூலம் ஒரு மகனும் மகளும் உள்ளனர். முத்து கிருஷ்ணனை தாக்கிய நெய் கிருஷ்ணனுக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஜன 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை