குற்றவாளிகள் தப்பி செல்லும் காட்சிகள் வைரல் | Crime | Chain Snatching
திண்டுக்கல் வேடசந்தூர் கோகுலம் நகரை சேர்ந்தவர் கோமதி. இன்று கோமதி போஸ்ட் ஆபிசுக்கு சென்று மீண்டும் வீடு நோக்கி நடந்து சென்றுள்ளார். கோமதி வீட்டின் அருகே வந்தபோது அவ்வழியாக பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் கோமதி அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்து தப்பி சென்றனர். கோமதி சுதாரிக்கும் முன் இந்த சம்பவம் அரங்கேறியது. அவர் கூக்குரலிட்டும் பலனில்லை. செயின் பறிப்பு ஆசாமிகள் கோமதி பார்வையில் இருந்து தப்பினர். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு இருந்த சிசிடிவியில் பதிவானது.
ஏப் 23, 2025