உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஊருக்குள் தலைக்காட்டும் முதலைகளால் திக் திக் crocodile| sathanur dam| flood

ஊருக்குள் தலைக்காட்டும் முதலைகளால் திக் திக் crocodile| sathanur dam| flood

திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையை ஒட்டி முதலைகள் பண்ணை உள்ளது. அணை நீரிலும் முதலைகள் வாழ்கின்றன. கடந்த 2ம் தேதி அணைக்கான நீர் வரத்து அதிகமானதால் உபரி நீர் தென் பெண்ணையாற்றில் திறக்கப்பட்டது. சாத்தனூர் அணையில் இருந்த முதலைகள் மதகுகள் வழியாக வெளியேறி உள்ளன. முதலை பண்ணையில் இருந்தும், முதலைகள் வெளியேறின. அவை தென் பெண்ணையாற்றில் அடித்துச் செல்லப்பட்டன. நீர் நிலைகளில் சேர்ந்த முதலைகள் தலைகாட்டத் தொடங்கி இருக்கின்றன. கடலூரில் சமீபத்தில் 2 முதலைகள் பிடிக்கப்பட்டன. சுமார் 150 முதலைகள் வெள்ளத்தில் வந்திருக்கலாம் என்றும், அது பற்றிய எச்சரிக்கை தகவல்களை நீர்வளத் துறை மற்றும் வனத் துறையினர் மூடி மறைத்துவிட்டதாக புகார்கள் எழுந்துள்ளன.

டிச 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை