உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கடலூரில் சீரழிக்கப்பட்ட 80 வயது மூதாட்டி: குற்றவாளி என்கவுன்டர் | Cuddalore |Police|Encounter

கடலூரில் சீரழிக்கப்பட்ட 80 வயது மூதாட்டி: குற்றவாளி என்கவுன்டர் | Cuddalore |Police|Encounter

கடலூர், பண்ருட்டி அடுத்துள்ள திராசு கிராமத்தை சேர்ந்தவர் 80 வயது மூதாட்டி. தினமும் காலை, மாலை நேரங்களில் புலவனூர் ரோட்டில் நடந்து செல்வார். வழக்கம் போல திங்களன்று காலையும் அந்த வழியாக சென்றுள்ளார். அப்போது அங்கே போதையில் நின்றிருந்த 4 இளைஞர்கள் மூதாட்டியை மறித்துள்ளனர். அருகில் இருந்த சவுக்கு தோப்பிற்குள் அவரை தர தரவென இழுத்து சென்றுள்ளனர். ஆடைகளை கிழித்து, மூதாட்டி வாயில் மண்ணை அள்ளி போட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர். கூட்டு பாலியல் வன்கொடுமையில் சிக்கிய அவர் அலறி சத்தம் போட்டுள்ளார். இதனால் பயந்து போன கும்பல் மூதாட்டி அணிந்திருந்த நகைகளை பறித்து தப்பியது. தோப்பில் காயங்களுடன் கிடந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டனர். சிதம்பரம் அரசு ஆஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சம்பவம் நடந்த இடத்தில் பண்ருட்டி இன்ஸ்பெக்டர் வேலுமணி ஆய்வு நடத்தினார். கடலூரில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி நடந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய சுந்தரவேல் என்பவன் அடையாளம் காணப்பட்டான். காடாம்புலியூரில் பதுங்கி இருந்த அவனை போலீசார் சுற்றி வளைத்தனர். கைது செய்ய சென்ற போது போலீசை தாக்கிவிட்டு சுந்தரவேல் தப்ப முயற்சி செய்தான், பண்ருட்டி இன்ஸ்பெக்டர் வேலுமணி அவன் காலில் துப்பாக்கியால் சுட்டார்.

ஜூன் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !