/ தினமலர் டிவி
/ பொது
/ கடலூர் கிராசிங் கோர விபத்து: கேட் கீப்பர் பங்கஜ் சர்மா காரணம் gate keeper pankaj sharma cuddalore
கடலூர் கிராசிங் கோர விபத்து: கேட் கீப்பர் பங்கஜ் சர்மா காரணம் gate keeper pankaj sharma cuddalore
கடலூர் அடுத்த செம்மங்குப்பத்தில் உள்ள ரயில்வே கிராசிங்கை கடந்த 8ம் தேதி காலை 7 மணியளவில் பள்ளி வேன் கடந்தபோது, அதிவேகத்தில் வந்த பயணிகள் ரயில் வேன் மீது மோதியது. இதில், ஒரு மாணவி, 2 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். வேன் டிரைவர் சங்கர் உட்பட 2 பேர் படுகாயமடைந்தனர். விபத்து நடந்த லெவல் கிராசிங்கில், கேட் கீப்பராக பங்கஜ் சர்மா என்பவர் பணியில் இருந்தார். அவர் ரயில்வே கேட்டை மூடாததால் தான் வேனை ஓட்டிச் சென்றதாகவும், அதனால் விபத்து ஏற்பட்டதாகவும் காயமடைந்த வேன் டிரைவர் சங்கர் வாக்குமூலம் அளித்தார்.
ஜூலை 16, 2025