வங்கக்கடலில் 27ம் தேதி உருவாகிறது புயல்! | cyclone | Depression | IMD | Rain Update | Weather News
வருகிறது Montha புயல் ஆரஞ்சு அலர்ட் லிஸ்டில் சென்னை தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் எதிரொலியாக தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு, வடமேற்கு திசையில் தமிழக கடலோர பகுதியை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடையும். 26ம் தேதிக்குள் ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 27ல் இது சூறாவளி புயலாக வலுப்பெறும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு தாய்லாந்து பரிந்துரையின்படி Montha மோன்தா என பெயரிடப்பட்டு உள்ளது. இதையடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ; இன்று புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. 26ம் தேதி விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, சென்னை, திருவள்ளூர் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. 27ம் தேதி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூரில் கனமழைக்கும், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னையில் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.