உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 1.55 லட்சம் உயிரினங்களும் மறைந்த சோகம்! | Cyclone Affect | Heavy Rain | IMD

1.55 லட்சம் உயிரினங்களும் மறைந்த சோகம்! | Cyclone Affect | Heavy Rain | IMD

பெஞ்சல் புயல் மற்றும் கன மழை சென்னை, கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உட்பட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பலத்த பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. 1 முதல் 3ம் தேதி வரை 10 பெண்கள், 13 ஆண்கள், 10 குழந்தைகள் என 33 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 14 பேர் வெள்ள நீரில் மூழ்கியும், ஒருவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும், ஏழு பேர் நிலச்சரிவில் சிக்கியும் இறந்துள்ளனர். மின்சாரம் தாக்கி 5 பேர் இறந்துள்ளனர். மற்றவர்கள் மின்னல் தாக்கி, சுவர் இடிந்து இறந்துள்ளனர். 12 பேர் காயமடைந்துள்ளனர். 14 பேர் விழுப்புரம், 12 பேர் திருவண்ணாமலை, 3 பேர் கடலுாரை சேர்ந்தவர்கள். ராணிப்பேட்டை, நீலகிரி, திருப்பத்துார், திருவள்ளூரில் தலா ஒருவர் இறந்துள்ளனர்.

டிச 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ