உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மொத்தமாக நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை | Cyclone Fengal | Heavy rain | Paddy damage | Gingee |

மொத்தமாக நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை | Cyclone Fengal | Heavy rain | Paddy damage | Gingee |

செஞ்சியில் ஒரே நாளில் கொட்டிய மழை 10,000 ஏக்கர் நெல் பயிர்கள் நாசம் தமிழகம், புதுச்சேரியை மிரட்டிய பெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே நேற்று நள்ளிரவு கரையை கடந்ததாக வானிலை மையம் கூறியது. புயல் காரணமாக நேற்று காலை முதலே கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. பெஞ்சல் புயலால் தமிழகத்திலேயே அதிகபட்சமாக விழுப்புரத்தில் 500 மிமீ மழை பதிவானது. புதுச்சேரியை போல் அங்கும் தொடர்ந்து கனமழை பெய்வதால் பல ஊர்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. பல இடங்களில் விளை நிலங்கள் இருந்த இடம் தெரியாமல் கடல் போல் காட்சி அளிக்கின்றன. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை மட்டும் 456 மி.மீ., மழை கொட்டி தீர்த்தது.

டிச 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ