உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 10 நாளாக வடியாத வெள்ளம் ரோட்டை மறித்த மக்கள் | cyclone fengal | Rain Water Protest

10 நாளாக வடியாத வெள்ளம் ரோட்டை மறித்த மக்கள் | cyclone fengal | Rain Water Protest

அழையா விருந்தாளிகளாக வீட்டுக்கு வரும் பாம்பு, பூரான் வெள்ளத்துக்கு நடுவே தவிக்கும் மக்கள் விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட ஆசிரியர் நகர், நேதாஜி நகர், லிங்கம் நகரை சேர்ந்த மக்கள், தங்கள் பகுதியில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற வலியுறுத்தி, இறந்த பாம்புடன் விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் மறியல் செய்தனர். அவர்கள் கூறும்போது, பெஞ்சல் புயல் மழையின்போது தங்கள் பகுதியில் தேங்கிய வெள்ளம் இன்னும் வடியவில்லை. நகராட்சி ஊழியர்கள் ஒவ்வொரு வீட்டிலும் பணம் வசூலித்து சென்றனர். அதன் பின்னும் தண்ணீர் வெளியேற்றப்படவில்லை. நீந்திதான் சென்று வர வேண்டி உள்ளது. பாம்பு உள்ளிட்டவை வீட்டுக்குள் வருகிறது என்றனர்.

டிச 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ