/ தினமலர் டிவி
/ பொது
/ அரசு பஸ் டிரைவர்களுக்கு விடுக்கப்பட்ட வார்னிங் என்னென்ன? | Chennai | Rain Alert | Chennai Rain
அரசு பஸ் டிரைவர்களுக்கு விடுக்கப்பட்ட வார்னிங் என்னென்ன? | Chennai | Rain Alert | Chennai Rain
சுழற்றி அடிக்க காத்திருக்கும் கனமழை பஸ் டிரைவர்களுக்கு பறந்த எச்சரிக்கை வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது புயலாக மாறவுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவாகும் இந்த புயலுக்கு பெங்கால் என பெயரிடப்பட்டுள்ளது. புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும். சென்னை புதுச்சேரி இடையே கரையை கடக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நவ 26, 2024