உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டில்லியில் காற்றின் தரத்தை மேம்படுத்த மக்கள் கோரிக்கை Delhi Air Quality Index | Air Quality improves

டில்லியில் காற்றின் தரத்தை மேம்படுத்த மக்கள் கோரிக்கை Delhi Air Quality Index | Air Quality improves

பஞ்சாப் விசாயிகள் அறுவடைக்கு பின் பயிர் கழிவுகளை தங்கள் நிலத்திலேயே வைத்து எரிக்கின்றனர். நிலத்தை பன்படுத்தவும், உடனடியாக அடுத்த நடவுக்கு தயாராவும் இந்த நடவடிக்கை மேற்கொள்வதாக கூறுகின்றனர். ஆனால், விவசாயிகளின் இந்த நடவடிக்கையால் தலைநகர் டில்லி மற்றும் அதை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் காற்று மாசு அதிகரிக்கிறது. இதனால், மக்கள் மூச்சு விடவே திணறும் நிலை ஏற்படுகிறது. வழக்கம் போல் இந்த ஆண்டும், அறுவடைக்கு பின் பயிர் கழிவுகள் எரிக்கப்படுவதால், டில்லியில் காற்றின் தரக் குறியீடு, 380 - 400 என்ற அளவை எட்டியது. இத்துடன், வானகப் புடை,தீபாவளி பட்டாசால் ஏற்பட்ட புகை, இது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என டாக்டர்கள், வல்லுனர்கள் எச்சரித்தனர். இந்நிலையில், கான்பூர் ஐஐடி உதவியுடன் டில்லியில் செயற்கை மழை பொழிவுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த முயற்சி பலன் தரவில்லை. பயிர் கழிவு எரிக்கப்படுவதை தடுக்க பஞ்சாப் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, டில்லி முதல்வர் ரேகா குப்தா வலியுறுத்தியுள்ளார். காற்றில் ஈரப்பத்தை அதிகரிக்கவும், காற்று மாசின் தாக்கத்தை குறைக்கவும், டில்லி முழுதும் நீர்த்தெளிப்பான்கள் பயன்படுத்தி சாலைகள், பொது இடங்களில் தண்ணீர் தெளிக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்றை விட இன்று காலை டில்லியில் காற்று மாசு சற்றே குறைந்து காற்றின் தரக்குறியீடு உயர்ந்துள்ளது. லோதி ரோடு, அக்ஷ்ர்தாம், எய்ம்ஸ் ஆஸ்பிடல், கர்தவ்ய பாத் உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் தரத்தில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. சில இடங்களில் 300 மற்றும் பல இடங்களில் 250க்கும் கீழ் காற்றின் தரக்குறியீடு அளவு பதிவானது. இதன்படி டில்லியில் நேற்று 366 ஆக இருந்து ஏர் குவாலிட்டி இன்டெக்ஸ் இன்று காலை சராசரியாக 312 என்ற நிலையை அடைந்தது. காற்றின் தரத்தில் பெரிய அளவு மாறுபாடு இல்லை என்றாலும், இந்த முன்னேற்றம் டில்லி மக்களுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது. வரும் நாட்களில், இந்த போக்கு நீடித்தால், காற்றின் தரம் மேலும் உயரும் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். #AQI| #Delhi| #PollutionControl| #DelhiNews|

நவ 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி