உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டில்லி குண்டு வெடிப்பை நடத்தியதே பாகிஸ்தான் தான் | delhi car blast | JEM Masood Azhar | umar un nabi

டில்லி குண்டு வெடிப்பை நடத்தியதே பாகிஸ்தான் தான் | delhi car blast | JEM Masood Azhar | umar un nabi

ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கைக்கு பழி தீர்க்கும் விதமாக, நம் நாட்டில் தாக்குதல் நடத்த பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ இ முகமது பயங்கரவாத அமைப்பு சதித் திட்டம் தீட்டி வருவதாக உளவுத்துறை எச்சரித்தது. இந்நிலையில் அந்த பயங்கரவாத அமைப்பை ஆதரித்து காஷ்மீரில் அக்டோபர் மாதம் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இது தொடர்பாக காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதில் என்ற டாக்டரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த காஷ்மீரைச் சேர்ந்த முஸாமில் அகமது கனி, உத்தர பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த ஷாஹீன் சயீத் உள்ளிட்ட 3 டாக்டர்களை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மூவரும், ஹரியானாவின் அல் பலாஹ் மருத்துவப் பல்கலையில் பணியாற்றியவர்கள் என்பது தெரியவந்தது. அந்த பல்கலை வளாகம் அருகே பதுக்கி வைத்திருந்த 360 கிலோ வெடிபொருட்களையும் போலீசார் கைப்பற்றினர். இதே பல்கலையை சேர்ந்த டாக்டர் உமர் நபிக்கு இவர்களுடன் தொடர்பு இருப்பது தெரிந்தது. அவனை போலீசார் தீவிரமாக தேடி வந்த போது தான், டில்லியில் வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட காரை ஓட்டிச் சென்று வெடிக்க வைத்தான். சம்பவம் தொடர்பாக என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை தீவிரமாக விசாரித்து வருகிறது. இதற்கிடையே டாக்டர்கள் அடங்கிய பயங்கரவாத கும்பல் மற்றும் டில்லி குண்டுவெடிப்பு பற்றி மத்திய உளவுத்துறையும் தனியாக விசாரணை நடத்தி முதல் கட்ட அறிக்கையை அரசுக்கு அளித்துஉள்ளனர். #DelhiRedFortCarBlast #MasoodAzhar #ANFO #INDvsPAK #DelhiBlast #Terrorism #SecurityConcerns #LiveUpdates #NationalSecurity #CurrentEvents #BreakingNews #PoliticalTension #PublicSafety #NewsReport #InvestigativeJournalism #SafetyMeasures #CounterTerrorism #BombThreat #CrisisManagement

நவ 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை