டில்லி நிலநடுக்கத்தால் வீதியில் தஞ்சமடைந்த மக்கள்! Delhi Earthquake | 4.0 Magnitude | NCS
தலைநகர் டில்லியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. டில்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் பூமிக்கு கீழே 5 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4 ஆக பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் நகரம் முழுவதும் நிலப்பரப்பில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இது தூங்கி கொண்டிருந்த மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திடீர் நில அதிர்வால் மக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியேறினர். பலரும் வீடுகளை விட்டு தெருக்களுக்கு சென்றதால் அதிக பதட்டம் ஏற்பட்டது. நொய்டா, காஜியாபாத் மற்றும் குருகிராம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகளில் இதன் தாக்கம் உணரப்பட்டது. அண்டை மாநிலங்களிலும் அதிர்வு உணரப்பட்டது. அதிகமான நிலநடுக்கம் இருந்த போதிலும் குறிப்பிடத்தக்க சேதம் அல்லது காயங்கள் எதுவும் இல்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.