இந்துத்துவா, இந்து சித்தாந்தம் என்பதன் பொருள் இதுதான் Mohan Bhagwat
ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூறாண்டு நிறைவை முன்னிட்டு டில்லி விஞ்ஞான் பவனில் 3 நாள் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்துகொண்டு பேசினார். நாம் சுதேசி கொள்கையை ஊக்குவித்து, சுய சார்பு உடையவர்களாக மாற வேண்டும். சுய சார்பு உடையவர்களாக இருக்க வேண்டும் என சொல்லும் போது, அதற்கு ஏற்றுமதி, இறக்குமதிகளை நிறுத்த வேண்டும் என்ற பொருள்கொள்ள கூடாது. சுயசார்புடன் இருந்தாலும் சர்வதேச வர்த்தகம் தொடரும். ஆனால் அது அழுத்தங்கள் கொடுத்து நடக்க கூடாது. நமது வர்த்தக கொள்கை தன்னார்வ அடிப்படையில் இருக்க வேண்டுமே தவிர கட்டாயத்தின் பேரில் இருக்க கூடாது. மக்கள் முதலில் உள்ளூர் பொருள்களை வாங்க வேண்டும்.
ஆக 27, 2025