பல் டாக்டர் மீது தம்பதி பகீர் புகார்: உண்மையில் நடந்தது என்ன? | Dentist | Government Hospital
சுத்தியால் அடித்து பல் பிடுங்கினார் உடைந்த தாடைக்கு கம்பி கட்டினார் திருப்பத்தூர் ஆரிப் நகரை சேர்ந்தவர் சமியுல்லா என்பவர் அங்குள்ள அரசு ஆஸ்பிடல் பல் டாக்டர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். புகார் மனுவில் அவர் கூறியுள்ளதாவது, கடந்த மே 21ம் தேதி பல் வலி காரணமாக திருப்பத்தூர் அரசு ஆஸ்பிடலுக்கு சென்றேன். டாக்டர் பல்லை பிடுங்க வேண்டும் என கூறினார். காட்டுமிராண்டித்தனமாக பல்லை சுத்தியால் அடித்து பிடிங்கினார். அப்போது என்னுடைய தாடை உடைந்து விட்டது. நான் வலியால் துடித்தேன். திரும்பவும் அடுத்த நாள் வந்து டாக்டரிடம் காட்டிய போது உடைந்த தாடைகளுக்கு கம்பி வைத்து கட்டினார். அதன் பிறகு என்னால் சரிவர சுவாசிக்க முடியவில்லை. உணவுகள் ஏதும் சாப்பிடாமல் நீர் ஆதாரங்களை மட்டுமே சாப்பிட்டு வருகிறேன். எனது தாடையை உடைத்த பல் டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமியுல்லா புகாரில் கூறியுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மல்லெட்( mallet) எனப்படும் பல் சிகிச்சை கருவி பார்க்க சுத்தியல் போலவே இருக்கும். அதனை கொண்டு பல்லை பிடிடுங்கியதை சுத்தியல் என தவறாக நினைத்து புகார் கொடுத்துள்ளனர் என டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.