உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இண்டிகோ நிறுவனத்தின் சேவை குறைப்பு: பயணிகள் பாதிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை DGCA Oreder for Indig

இண்டிகோ நிறுவனத்தின் சேவை குறைப்பு: பயணிகள் பாதிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை DGCA Oreder for Indig

விமானி மற்றும் விமானப் பணியாளர்களுக்கான பணி நேரம், விடுப்பு உள்ளிட்டவற்றில் விமான போக்குவரத்து அமைச்சகம் திருத்தம் செய்தது. இந்த புதிய நடைமுறை, நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதன் படி, பைலட் உள்ளிட்ட முக்கிய பணியாளர்களுக்கான ஓய்வு உள்ளிட்டவற்றில் பல மாற்றங்கள் அமலாகின. ஆனால், இந்த விதிகளை பின்பற்றும் அளவுக்கு, இண்டிகோ நிறுவனத்திடம் பணியாளர்கள் இல்லாதது பிரச்னையை ஏற்படுத்தியது. அரசு உத்தரவுக்குப் பிறகும், அதை பின்பற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க இண்டிகோ நிறுவனம் முன்வரவில்லை. இதனால் முன்னெப்போதும் இல்லாத வகையில், அந்நிறுவனத்தின் விமான சேவைகள் நாடு முழுதும் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஒரு வாரமாக, லட்சக்கணக்கான பயணியர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், குளிர்கால அட்டவணையில் 10 சதவீத விமான சேவையை குறைக்க இண்டிகோ நிறுவனத்துக்கு DGCA சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. DGCA| Indigo| GoAir| Indigoflight| Flightdelay|

டிச 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ