உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தர்மஸ்தலா கோயில் சர்ச்சை: புகார் அளித்தவர் திடீர் பல்டி | Dharmasthala | Karnataka

தர்மஸ்தலா கோயில் சர்ச்சை: புகார் அளித்தவர் திடீர் பல்டி | Dharmasthala | Karnataka

கர்நாடகாவில் கடலோர மாவட்டமான தட்சிண கன்னடா, தர்மஸ்தலாவில் பிரசித்தி பெற்ற மஞ்சுநாதா கோயில் உள்ளது. இந்த கோயிலில் 1995 முதல் 2012ம் ஆண்டு வரை, துாய்மை பணியாளராக வேலை செய்த ஒருவர், ஜூலை 3ம் தேதி சில வக்கீல்களுடன் பெல்தங்கடி கோர்ட் சென்று நீதிபதி முன் வாக்குமூலம் அளித்தார். அதில், தர்மஸ்தலா கோயிலில் நான் பணியாற்றிய காலகட்டத்தில், பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் உடல்களை, என் மேற்பார்வையாளர் உத்தரவின்படி நேத்ராவதி ஆற்றங்கரையில் புதைத்தேன். கடந்த 2012ம் ஆண்டிற்கு பின், வேறு மாநிலத்திற்கு சென்று விட்டேன். புதைக்கப்பட்ட பெண்கள் என் கனவில் வந்ததால் மனசாட்சி உறுத்தியது. தற்போது உண்மையை சொல்ல வந்துள்ளேன் என கூறினார். மேலும் சில எலும்பு கூடுகள், மண்டை ஓடுகளையும் கோர்ட்டில் சமர்ப்பித்தார். இதை தொடர்ந்து தர்மஸ்தலா யாத்திரைசென்றிருந்தபோது தனது மகள் காணாமல் போனதாக மேலும் ஒரு பெண் புகார் அளித்தார். இது, கர்நாடகா மட்டுமின்றி, நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பெல்தங்கடி போலீஸ் நிலையத்திலும் வழக்கு பதிவானது. சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி கோபால கவுடா உள்ளிட்டோர், இந்த வழக்கை, எஸ்.ஐ.டி எனும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு ஒப்படைக்க கோரி, மாநில அரசுக்கு அழுத்தம் கொடுத்தனர். இதன்படி, ஜூலை 19ம் தேதி எஸ்.ஐ.டி., விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது. உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு டி.ஜி.பி., பிரணவ் மொஹந்தி தலைமையிலான குழுவில் மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அனுசேத், ஜிதேந்திர குமார் தயமா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட போலீசார் நியமிக்கப்பட்டனர். இவர்கள், தர்மஸ்தலா மஞ்சுநாதா கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள நேத்ராவதி ஆற்றின் கரையோரம், புகார்தாரர் அடையாளம் காட்டிய 13 இடங்களை, மார்க்கிங் செய்தனர். ஜூலை 29ம் தேதி முதல் அங்கு குழிகள் தோண்டப்பட்டன. ஆனால், எதுவும் கிடைக்கவில்லை. இதற்கிடையில், புகார் சொன்ன தூய்மை பணியாளர் கோர்ட்டில் சமர்பித்த மண்டையோடு ஒரு ஆணுடையது என ஆய்வில் தெரியவந்தது.

ஆக 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை