உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தர்மஸ்தலா கோயில் சர்ச்சை பின்னணியில் மாபெரும் சதி | Dharmasthala | Karnataka

தர்மஸ்தலா கோயில் சர்ச்சை பின்னணியில் மாபெரும் சதி | Dharmasthala | Karnataka

கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில், புகழ் பெற்ற மஞ்சுநாதா சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயில் அருகில் ஓடும் நேத்ராவதி ஆற்றங்கரையில், பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பெண்கள் உடல்களை புதைத்ததாக, கோயிலின் முன்னாள் ஊழியர் ஒருவர் பரபரப்பு புகார் அளித்தார். இது தொடர்பாக, எஸ்.ஐ.டி., விசாரணை நடக்கிறது. இந்நிலையில், பெண்கள் உடல்களை சட்டவிரோதமாக புதைத்ததாக கூறும்படி சென்னையை சேர்ந்த ஒரு கும்பல் என்னை தொடர்பு கொண்டது. அந்த கும்பல் கூறியபடி நடந்து கொண்டேன் என புகார்தாரர் பல்டி அடித்துள்ளார். இதனால் தர்மஸ்தலா கோயில் விவகாரத்தில் திட்டமிட்டு வதந்தி பரப்பப்பட்டது தெரியவந்துள்ளது.

ஆக 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை