புகார் சொன்ன மாஸ்க்மேன்: கிழித்து தள்ளும் முதல் மனைவி Dharmasthala case: Complainant mask man
அவன் கொடூரன்; மோசடி பேர்வழி மாஸ்க்மேனின் மனைவி பகீர் தர்மஸ்தலா சர்ச்சை பரபரப்பு திருப்பம் டிஸ்க்: புகார் சொன்ன மாஸ்க்மேன்: கிழித்து தள்ளும் முதல் மனைவி Dharmasthala case: Complainant mask man First wife and village people statement karnataka police crime தர்மஸ்தலா கோயில் விவகாரத்தில் புகார் கூறிய மாஸ்க்மேன் பல்டி அடித்த நிலையில், அவனைப் பற்றி மனைவியும் ஊராரும் பகீர் தகவலை வெளியிட்டிருப்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடா, மாவட்டம் தர்மஸ்தலாவில் பிரசித்தி பெற்ற மஞ்சுநாதா கோயில் உள்ளது. இந்த கோயிலில் 1995 முதல் 2012ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 100க்கு மேற்பட்ட பெண்கள் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டனர். அவர்களை என் மேலதிகாரி உத்தரவின்பேரில் நேத்ராவதி ஆற்றங்கரையில் புதைத்தேன் என கோயிலில் துாய்மை பணியாளராக வேலை செய்த ஒருவர் கடந்த ஜூலை மாதம் பகீர் புகாரை கிளப்பினார். பெல்தங்கடி கோர்ட்டுக்கு வழக்கறிஞர்களுடன் சென்று நீதிபதி முன் வாக்குமூலமும் அளித்தார். இந்த சம்பவம் கர்நாடகா மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. 2012ம் ஆண்டில் சென்னையில் குடியேறினேன். கொன்று புதைக்கப்பட்ட பெண்கள் என் கனவில் வந்ததால் மனசாட்சி உறுத்தியது. அதனால் இத்தனை ஆண்டுகள் கழித்து உண்மையை சொல்கிறேன் என கூறி, சில எலும்பு கூடுகள், மண்டை ஓட்டையும் கோர்ட்டில் சமர்ப்பித்தார்.