டி.வி.ராமசுப்பையர் பாதம் வணங்குகிறேன்: எஸ்.ஆர் சேகர் புகழஞ்சலி | Dinamalar | T. V. Ramasubbaiyer
மக்களிடம் தேசபக்தியை ஊட்டியதில் தினமலருக்கு முக்கிய பங்குண்டு. அதன் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் நினைவு நாளில் அவருடைய பாதங்களை வணங்கி என் பயணத்தை தொடர்கிறேன் என பாஜ மாநில பொருளாளர் எஸ்.ஆர் சேகர் புகழஞ்சலி செலுத்தினார். பத்திரிக்கை உலகில் நடுநிலைமை என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ஆனால் நடு நிலைமையோடு தேசபக்தியை ஊட்டி விட்டது தினமலர். இன்றைய திராவிட ஆட்சியாளர்கள் அரசினுடைய விளம்பரங்கள் எதையுமே அதற்கு தந்ததில்லை. போடுகின்ற செய்திகள் எல்லாம் நடுவு நிலையோடு இருப்பதை ஆளுகின்ற அரசு விரும்பியதில்லை . அதையும் மீறி அரசின் குற்றத்தை தயவு தாட்சண்யம் இன்றி வெளிச்சம் போட்டு காட்டுகிறது தினமலர். தமிழ் பத்திரிகை உலகில் தனக்கென ஒரு இடம் பெற்று இருக்க காரணமானவர் டிவி ராமசுப்பையர். அவரை ஏசாத கழக கண்மணிகளே இல்லை. இதையும் மீறி சரித்திரம் படைத்த அந்த மாமனிதனின் நினைவு நாள் இன்று ஒரு எழுத்தாளனாக அவருடைய பாதங்களை வணங்கி என் பயணத்தை தொடர்கிறேன் என்றார் எஸ்.ஆர் சேகர்.