தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சிக்கு பின் மனம் தெளிந்த மாணவர்கள் Dinamalar Vazhikatti - 2025 PVK Mah
ப்ளஸ் 2வுக்கு பின் என்ன படிக்கலாம்; எங்கு படிக்கலாம் என பயனுள்ள கல்வி ஆலோசனைகளை அள்ளி வழங்கும் தினமலர் வழிகாட்டி கல்வி நிகழ்ச்சி, திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு பி.வி.கே. மகாலில் துவங்கியது. தினமலர் நாளிதழுடன், கோவை ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து நிகழ்ச்சியை நடத்தின. ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி டீன், விஜய சாமுண்டீஸ்வரி குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். 50க்கு மேற்பட்ட கல்வி நிறுவன அரங்குகளை, ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி டீன் விஜய சாமுண்டீஸ்வரி, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி முதல்வர் சித்ரா, பேராசிரியர் சந்தானகிருஷ்ணன், கற்பகம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி முதல்வர் மணிமாறன், மாணவியர் மிருதுளா வர்ஷினி, விவாகா திறந்து வைத்தனர். கருத்தரங்குகளில் பல்வேறு தலைப்புகளில் நாற்றுக்கணக்கான அரிதான படிப்புகள் தொடர்பாக கல்வி நிபுணர்கள் மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கின்றனர். இன்று நடந்த கருத்தரங்கில் கலை, அறிவியல் பற்றி ஸ்ரீராமகிருஷ்ணா கல்லுாரி பேராசிரியர் சந்தானகிருஷ்ணன் உரையாற்றினார். நீட், ஜெ.இ.இ. பற்றி கல்வி ஆலோசகர் அஸ்வின், அனைவருக்கும் ஐ.ஐ.டி. பற்றி சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் டாக்டர் காமகோடி பேசினர். மரைன் கேட்டரிங், ஓட்டல் மேனேஜ்மென்ட் பற்றி SLCS கல்லுாரி பேராசிரியர் சுரேஷ்குமார், மீடியா அனிமேஷன் பற்றி SLCS கல்லுாரி பேராசிரியர் கிஷோர் குமார் விளக்கம் அளித்தனர். சி.ஏ. வணிக படிப்புகள் குறித்து ஆடிட்டர் அருண் ICAI, விஞ்ஞானி ஆகும் வழி பற்றி DRDO விஞ்ஞானி, டாக்டர் டில்லி பாபு, இன்ஜினியரிங் எதிர்காலம் குறித்து கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைத்தனர். கடல்சார் படிப்புகள் பற்றி கேப்டன் கப்ரியல் பூபாலராயன், தொழிலக பாதுகாப்பு படிப்புகள் குறித்து SLCS கல்லுாரி பேராசிரியர் விவேக் ராம்குமார் ஆகியோர் பேசினர். CA வணிக படிப்புகள் பற்றி ஆடிட்டர் அபிஷேக், உயர் கல்வி பற்றி IFS அதிகாரி சுதா உள்ளிட்டோர் விளக்கம் அளித்தனர்.