இன்ஜினியரிங் கவுன்சிலிங் சந்தேகங்களை தீர்த்து வைத்த தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி!Dinamalar|Vazhikatt
அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் இன்ஜினியரிங் கல்லூரிகளில் உள்ள, பி.இ - பி.டெக். படிப்புகளுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்கள், ஆன்லைன் கவுன்சிலிங் வாயிலாக நிரப்பப்படுகின்றன. இந்த கவுன்சிலிங்கை டி.என்.இ.ஏ. என்ற இணையதளத்தின் வாயிலாக, தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்துகிறது. பி.இ, பி.டெக் படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு, கவுன்சிலிங் குறித்து வழிகாட்டும் வகையில், தினமலர் நாளிதழ், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனத்துடன் இணைந்து நடத்தும், இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி, சென்னை தி.நகர் வாணி மகாலில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில், எந்த கட் ஆப் மதிப்பெண்ணுக்கு, எந்த கல்லூரியில் இடம் கிடைக்கும். நவீன தொழில்நுட்ப படிப்புகளில் உள்ள வாய்ப்புகள் என்னென்ன? கோர் இன்ஜினியரிங் துறைகளின் எதிர்காலம் எப்படி இருக்கும் என விளக்கப்பட்டது.