உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அடாத மழையிலும் விடாது பர்சேஸ் செய்யும் மக்கள்! Diwali Purchase | Tamilnadu | Chennai | Covai

அடாத மழையிலும் விடாது பர்சேஸ் செய்யும் மக்கள்! Diwali Purchase | Tamilnadu | Chennai | Covai

தீபாவளி பண்டிகை வரும் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இந்தியா முழுவதும் தீபாவளி ஷாப்பிங் களைகட்டி வருகிறது. இன்று ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு ஊர்களிலும் மக்கள் ஜவுளி கடைகளுக்கு படையெடுத்தனர். தங்களுக்கு பிடித்தமான ஆடைகளை பர்சேஸ் செய்து தீபாவளி கொண்டாட தயாராகினர். சென்னை வண்ணாரப்பேட்டை எம்சி ரோட்டில் உள்ள ஜவுளி கடைகளில் மக்கள் குவிந்தனர். பெரிய கடைகளுக்கு இணையாக சாலையோர கடைகளிலும் விற்பனை களைகட்டியது. நடக்க இடமில்லாமல் எம்சி ரோடு முழுவதும் மக்கள் தலைகளாக காட்சி அளித்தது. போலீசார் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அக் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை