உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மேகதாது அணை தமிழகத்துக்கும் நல்லது: கர்நாடக முதல்வர் சத்தியம் | DK Shivakumar Mekedatu Statement

மேகதாது அணை தமிழகத்துக்கும் நல்லது: கர்நாடக முதல்வர் சத்தியம் | DK Shivakumar Mekedatu Statement

மேகதாது அணை தொடர்பாக தமிழக முதல்வர் விஜய் உடன் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கிறேன் என கர்நாடக முதல்வஏ சிவக்குமார் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் நடந்த சட்ட மேலவைத் தேர்தலில் தனது ஓட்டை பதிவு செய்த பின் பேசிய அவர், மேகதாது திட்டம் குறித்து தமிழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்தவித தயக்கமும் இல்லை. தமிழக முதல்வருடன் எப்போது வேண்டுமானாலும் பேச நான் தயாராக உள்ளேன். தமிழகமாக இருந்தாலும் சரி, கர்நாடகாவாக இருந்தாலும் சரி, நாம் அனைவரும் ஒரே நாடு, ஒரே மக்கள். ஒரே நதியின் தண்ணீரைத்தான் நாம் நம்பியிருக்கிறோம். விவசாயம், குடிநீர் மற்றும் தொழில்துறை என அனைத்துக்கும் தண்ணீர் தேவைப்படுகிறது. காவிரி ஆறு மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகள், பறவைகள் மற்றும் தாவரங்களையும் வாழ வைக்கிறது. தமிழகத்தை சேர்ந்த பலர் கர்நாடகாவில் பணிபுரிகின்றனர். அதேபோல் கர்நாடகாவைச் சேர்ந்த பலரும் தமிழ்நாட்டில் வசித்து வருகின்றனர். எனவே, இந்தச் சிக்கலை நாம் ஒரு குறுகிய நோக்கில் பார்க்கக் கூடாது.

ஜூன் 18, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை