உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தெரியாம தப்பு நடந்துருச்சுங்க! கெஞ்சிய கான்ட்ராக்டர் | DMK | Flag Poll

தெரியாம தப்பு நடந்துருச்சுங்க! கெஞ்சிய கான்ட்ராக்டர் | DMK | Flag Poll

சின்ன கீறல் கூட விழக்கூடாது மிரட்டல் விட்ட திமுக நிர்வாகி டிஸ்க்: தஞ்சாவூர் மாவட்டம் ராஜகிரி கண்டியன் வாய்க்கால் அருகே கல்வெட்டு அமைக்கும் பணி நடக்கிறது. இதனால் ரோட்டு ஓரத்தில் இருந்த திமுக கொடி கம்பம் அகற்றப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த திமுக நிர்வாகிகள் கம்பத்தை மீண்டும் நட சொல்லி வாக்குவாதம் செய்தனர். Breath சம்பத்தை தொடர்ந்து திமுக சிறுபான்மை பிரிவு நிர்வாகி யூசுப் அலியை கான்ட்ராக்டர் சந்தித்து பேசினார். திமுக கொடி கம்பத்தை வேண்டும் என்றே அகற்றவில்லை. பணிக்கு இடையூறாக இருந்ததால் தவறுதலாக பணியாளர்கள் அகற்றி விட்டனர். அதற்காக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். கொடி கம்பத்தை சரி செய்து மீண்டும் அதே இடத்தில் வைத்து தருகிறேன் என கான்ட்ராக்டர் உறுதி அளித்தார். கம்பத்துக்கு ஒரு கீறல் கூட விழக்கூடாது என திமுக நிர்வாகி யூசுப் அலி எச்சரித்தார். இதையடுத்து திமுகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் தஞ்சை-கும்பகோணம் ரோட்டில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஜூலை 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை