உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மதுரை முருக பக்தர்கள் மாநாடு: திமுகவினருக்கும் அழைப்பு | DMK | Madurai murugan maanadu

மதுரை முருக பக்தர்கள் மாநாடு: திமுகவினருக்கும் அழைப்பு | DMK | Madurai murugan maanadu

மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது சிக்கந்தர் தர்கா உள்ளது. இங்கு சில மாதங்களுக்கு முன் சில மத அமைப்புகள் ஆடு, கோழி பலியிட முயன்றனர். முருக பக்தர்கள், இந்து அமைப்புகள் அதனை எதிர்த்தனர். தொடர்ந்து இந்து அமைப்புகள் சார்பில், கடந்த பிப்ரவரி 4ல் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன் வெற்றியைத் தொடர்ந்து ஜூன் 22ல், மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தப் போவதாக, கடந்த மார்ச் மாதம் இந்து முன்னணி அறிவித்தது. துவக்கத்தில் இந்த மாநாட்டு பணிகளில் இந்து முன்னணி மட்டுமே ஈடுபட்டு வந்தனர். இப்போது பா.ஜ, விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகள் இணைந்துள்ளது. குறைந்தது ஐந்து லட்சம் பேரை திரட்ட வேண்டும் என்ற இலக்குடன், பாஜவும், சங் பரிவார் அமைப்புகளும் முழுவீச்சில் களமிறங்கியுள்ளன. தென் மாவட்டங்கள், கோவை நீலகிரி, ஈரோடு, திருப்பூரில் பா.ஜ., சங் பரிவார் அமைப்பு நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று, குடும்பத்துடன் மாநாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்து வருகின்றனர். மாநாட்டுப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிர்வாகிகளும், தொண்டர்களும் ஒருவேளை சாப்பிடாமல் விரதம் இருக்கின்றனர். அரசியல் வேறுபாடு இல்லாமல் நடத்தப்படும் மாநாடு என்பதால் திமுக உட்பட அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

ஜூன் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை