உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காசு இல்லாம இங்க வேலை நடக்காது! வேதனையில் திமுகவினர் | DMK | Tenkasi | Corruption

காசு இல்லாம இங்க வேலை நடக்காது! வேதனையில் திமுகவினர் | DMK | Tenkasi | Corruption

தென்காசி சொக்கம்பட்டி அருகே உள்ள திரிகூடபுரம் பகுதியை சேர்ந்த திமுக கிளை கழக செயலாளர் சுப்பிரமணியன். 2 நாட்களுக்கு முன் தென்காசிக்கு திமுக எம்பி கனிமொழி வந்த போது மனு கொடுக்க வந்துள்ளார். அவரை உள்ளே அனுமதிக்காததால் மனுவினை ஒன்றிய செயலாளர் மூலம் கொடுத்து அனுப்பி உள்ளார். பின் அவர் திமுக அலுவலகம் முன் நின்று பணம் தான் எல்லாம், பணம் கொடுத்தால் வேலை நடக்கும். 7,500 சம்பளத்திற்கான ரேஷன் கடை பணிக்கு 7 முதல் 10 லட்சம் வரை கமிஷன் கொடுக்க வேண்டி உள்ளது. கடையநல்லூர் தொகுதி பொறுப்பாளர் கூட 5 லட்சம் கொடுத்து தான் அவரது மகனுக்கு இபியில் வேலை வாங்கி உள்ளார். அவர் கொடுப்பார். ஏழை நாங்கள் எப்படி கொடுப்போம். பல வருடம் கட்சிக்கு உழைத்தும் பலனில்லை என மனக்குமுறலை வெளிப்படுத்தி உள்ளார்.

ஜூன் 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை