/ தினமலர் டிவி
/ பொது
/ காற்று மழையால் சரிந்த ஸ்டாலின், உதயநிதி கட்அவுட்கள் | DMK Banner Accident | Tiruvallur heavy rain
காற்று மழையால் சரிந்த ஸ்டாலின், உதயநிதி கட்அவுட்கள் | DMK Banner Accident | Tiruvallur heavy rain
திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரில் மத்திய அரசை கண்டித்து நாளை நடைபெற உள்ள கண்டன பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். கூட்டத்துக்கான ஏற்பாடுகளை திருவள்ளூர் மாவட்ட திமுக நிர்வாகிகள் மும்முரமாக செய்து வருகின்றனர். கூட்டத்துக்கு காரில் வரும் ஸ்டாலின், உதயநிதியை வரவேற்கும் விதமாக திமுகவினர் திருவள்ளூர் மாவட்ட எல்லையான அரண்வாயல் முதல் கூட்டம் நடக்கும் திருப்பாச்சூர் வரை 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையின் இரு புறமும் கம்பங்களை நட்டு திமுக கொடியை உடன்பிறப்புகள் கட்டி வருகின்றனர். திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து திருப்பாச்சூர் வரை 25 அடி உயரத்தில் 5 ராட்சத கட் அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன.
மார் 11, 2025