உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஃபுட் பாய்சன் ஆனதால் குழந்தைகள் பாதிப்பு

ஃபுட் பாய்சன் ஆனதால் குழந்தைகள் பாதிப்பு

மதுரை திருமங்கலம் அடுத்த வில்லூரில் நேற்று திமுக பொது உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் மதன் குமார் இதற்கான ஏற்பாடு செய்துள்ளார். மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை வகித்தார். கூட்டத்திற்கு வந்திருந்தவர்களுக்கு, சில்வர் தட்டு, சிக்கன் பிரியாணி பார்சல், தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது. சிலர் அங்கேயே பிரியாணி சாப்பிட்டு சென்றனர். சில பெண்கள் பார்சலை வீட்டுக்கு எடுத்து சென்றனர். மாலையில் பள்ளி முடிந்த வந்த குழந்தைகள், வீட்டில் உள்ளவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டு உள்ளனர். அவர்களில் நூற்றுக்கு மேற்பட்டோருக்கு நேற்றிரவு வாந்தி, பேதி ஏற்பட்டது. அதில் பெரும்பாலனவர்கள் 3 முதல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள். அவர்கள் அனைவரும் வில்லூர், கள்ளிக்குடிஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டனர்.

செப் 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை