உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நடவடிக்கை எடுக்க திமுக கவுன்சிலர் கம்பளைண்ட் | DMK councilor | Tambaram | Advertising banners

நடவடிக்கை எடுக்க திமுக கவுன்சிலர் கம்பளைண்ட் | DMK councilor | Tambaram | Advertising banners

அபாயத்தை கிளப்பும் ராட்சத பேனர்கள்! அகற்றுவது எப்போது? தமிழகத்தில் பொது வெளியில் விளம்பர பேனர்கள் அமைக்க பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால் யாரிடமும் அனுமதி பெறாமல் சென்னையில் இரவோடு இரவாக விளம்பர பேனர் வைத்து விடுவதாக கூறப்படுகிறது. தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, வானியங்குளம் பகுதியில் இது போன்று பாதுகாப்பின்றி அமைக்கப்பட்டு உள்ளது. தாம்பரம் மதுரவாயில் மேம்பாலம் மீதும் விளம்பர பலகை ஆக்கிரமித்து உள்ளன. சிலர் புறம்போக்கு இடத்தில் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்து பிரமாண்ட ராட்சத பேனர்கள் வைத்துள்ளனர். பல இடங்களில் பேனர் வைக்கும் இரும்பு குழாய்கள் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் கழன்று விழும் அபாயத்தில் உள்ளன. தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இவை அனைத்தையும் அகற்ற தாம்பரம் 33 வது வார்டு திமுக கவுன்சிலர் சுரேஷ் தாம்பரம் மாநகராட்சி கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.

மே 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !